Ruban Raj

Ruban Raj

por Ruban Raj
Temporada 1
Kathirukiraen - Neram Odum
Explícito
நேரம் ஓடும், உலகம் மாறும், நிலவை மாற்றும் சூரியன் இந்த உலக வாழ்வு கடந்து போகும், ஒரு நிழல் போல மறைந்து போகும் - 2 காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2 1. கண்மூடி நடந்தேன் தடுமாறி விழுந்தேன் உம் கரம் பிடித்து நடத்தினீரே கடல் போன்ற சோதனை என் முன்னே வந்தாலும் உம் வார்த்தை கொண்டு தேற்றினீரே -2 சோதனை வந்தாலும் அஞ்ச வேண்டாம் கர்த்தர் நம்மோடு என்றும் இருப்பார் மரணத்தின் விளிம்பில் நின்றால் கூட நித்திய ஜீவ வாசல் திறப்பார் - 2 காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2 2. மனித பாவம் போக்க மனிதனானீர் இயேசுவே ரத்தத்தால் கழுவி உம் பிள்ளையாக மாற்றினீர் மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே -2 இயேசு கிறிஸ்து, பாவத்தை சுமந்தார் சிலுவையில் மரித்தாரே மரணத்தை வென்றவர், உயிர்த்தெழுந்தார் அவர் நாமம் மேலானதே -2 காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2 நேரம் ஓடும், உலகம் மாறும், நிலவை மாற்றும் சூரியன் இந்த உலக வாழ்வு கடந்து போகும், ஒரு நிழல் போல மறைந்து போகும் - 2 காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2 நித்திய ஜீவன், நித்திய ஜீவன் என் நேசரோடு என்றென்றும் ஆனந்தம், சந்தோஷம் அவரது இராஜ்யத்தில் -2 காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2